தாபனம் தொடர்பான அறிமுகம்

மாகாணத்தினுள் அரச காணிகளை இனங்காணுதல், மற்றும் அவற்றினைப் பாதுகாக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு இனங்காணப்பட்ட அரச காணிகளை மிகவும் பயனுள்ள விடயங்களுக்காக விடுவித்தல் , விடுவிக்கப்பட்ட காணிகளின் மீள்பார்வை நடவடிக்கை, மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

பதின் மூன்றாவது அரசியலமைப்பின் திருத்தத்திற்கு இணங்க மாகாண சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களுக்கு இணங்க மாகாணத்தினுள் அரச காணிகளின் முகாமைத்துவம், மற்றும் நிர்வாகம் செய்வதற்காக மேல் மாகாணத்தின் காணி ஆணையாளர் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா.கொழும்பு, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்கள், மற்றும் 40 பிரதேச செயலாளர் பிரிவுகளை மேல் மாகாணம் கொண்டுள்ளது.அந்த பிரதேச செயலாளர் காரியாலயங்களுள் காணப்படும் எல்லா அரச காணிகளின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாக நடவடிக்கை, காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் , அரச காணி கட்டளைச் சட்டம் ,காணி பிரதான விஷேட ஏற்பாடுகள் சட்டம், மற்றும் பிற சட்டங்கள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

“நிலைதகு அரச காணி முகாமைத்துவத்திற்காக முன்னுரிமை பங்களிப்பினை வழங்குதல் ”எங்களது திணைக்களத்தின் நோக்கமாவதுடன் அந் நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரச காணியினை விடுவித்தல்,மேற்பார்வை, அபிவிருத்தி, மற்றும் அரச காணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி என்ற விடயங்களை நிறைவேற்றுவதற்காக மாகாண பிரதான காரியாலயம் ,மாவட்ட காரியாலயம், மற்றும் நாற்பது பிரதேச காரியாலயங்களுக்காக அலுவலகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.