தகவல்

மேல் மாகாணத்தினுள் அரச காணிகளை விடுவித்தல், மேற்பார்வை,பாதுகாப்பு, அபிவிருத்திக்கான நிதி ரீதியிலான,தொழினுட்ப மற்றும் சட்டரீதியிலான ஒத்துழைப்பினை வழங்கி தொடர்ச்சியாக அரச காணிகளை முகாமைத்துவம் செய்ய மேல் மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

முழு நாடும் உட்படுமாறு அரச காணி முகாமைத்துவ அமைப்புடன் ஒன்றிணைந்து மிகவும் சரியாக மற்றும் விரைவாக இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள தகவல் தொழிநுட்ப சேவையினை மேம்படுத்துவது மிகவும் முக்கியமான விடயம் என்பது எனது நம்பிக்கையும் எண்ணமுமாகும்.

மாகாணத்தினுள் கொளனியில் வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களையும், அரச காணிகளில் பயன் பெறுபவர்களுக்குரிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காகத் தேவையான ஆலோசனைகளையும், மக்களுக்கு வழங்கியும் , தகவல் பெறும் சட்டத்துடன் இணைந்து, வெளியிடப்பட்டுள்ள மேல் மாகாண காணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திற்கு எனது நல்லாசியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

காமிணி திலகசிறி
மேல் மாகாண விவசாய, காணி, நீர்ப்பாசன. கடற்றொழில், விலங்கு உற்பத்தி மற்றும் விலங்கு சுகாதாரம்
அத்துடன் கமநல அபிவிருத்தி தொடர்பான அமைச்சர்.